search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள்"

    உத்தர பிரதேச சட்டசபையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதுடன், பேப்பர் பந்துகளையும் வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. #UPBudgetSession #UPAssembly
    லக்னோ:

    பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், சட்டசபை மற்றும் சட்ட மேலவை ஆகிய இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் கவர்னர் ராம் நாயக் உரையாற்றினார். கவர்னர் உரையாற்றத் தொடங்கிய சிறிது நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் (சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள்) அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பத் தொடங்கினர். கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், ‘கவர்னர் கோ பேக்’ என்றும் முழக்கமிட்டனர்.

    ஒருகட்டத்தில், சபையின் மையப்பகுதியை நோக்கி பேப்பர் பந்துகளை வீசி எறிந்தனர். அவற்றை சபை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.



    இந்த அமளிக்கு இடையிலும் கவர்னர் ராம் நாயக் தனது உரையை தொடர்ந்தார். அவர் தனது உரையில், அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.

    வரும் 7-ம் தேதி நிதி மந்திரி ராஜேஷ் அகர்வால், பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பிப்ரவரி 22-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. #UPBudgetSession #UPAssembly
    கர்நாடக மாநிலத் தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காததால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ.க. வலைவிரிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. #KarnatakaElection #KarnatakaGovt
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 தொகுகிளில் பா.ஜ.க. வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதிலும், ஆட்சியமைக்க மெஜாரிட்டி இல்லை. இருப்பினும் ஆட்சியைக் கைப்பற்ற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் கர்நாடக பிரகின்யவந்தா கட்சி வேட்பாளர்கள் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

    யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத நிலையில், அதிக தொகுதிகளை வென்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க. ஆட்சியமைக்க உரிமை கோரி உள்ளது. அதேசமயம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.  காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கின்றன. ஆனால் யாரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்பதைப்பொருத்தே அடுத்தகட்ட அரசியல் நகர்வு இருக்கும்.

    இந்த சூழ்நிலையில், பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு 4 எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை என்றும், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தகவல்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தங்களுடன் தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக சித்தராமையா கூறியுள்ளார்.



    இதற்கிடையே மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளதால் பா.ஜ.க. அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், கூட்டணியை உடைத்து எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க வலைவீசுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கூட்டணியை உடைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை  தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க. முயற்சிப்பதாகவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ.க. தலைவர்கள் போனில் அழைப்பு விடுத்திருப்பதாகவும் மாநில முன்னாள் அமைச்சர் சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது ஒருபுறமிருக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. எனவே, கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #KarnatakaElection #KarnatakaGovt
    ×